Savings vs Investment – What’s More Important? | சேமிப்பு vs முதலீடு – எது முக்கியம்?

 

சேமிப்பு vs முதலீடு – எது  முக்கியம்? (Savings vs Investment)





தமிழினி:
வணக்கம், பார்கவி! நீங்க எப்படி இருக்கீங்க?


பார்கவி:
வணக்கம், தமிழினி அக்கா! நான் நல்லா தான் இருக்கேன். நீ எப்படி இருக்கீங்க?


தமிழினி:
நானும் நல்லா தான் இருக்கேன். சமீபத்துல ஆக்ஷிதா கிட்ட பேசும்போது, அவ சேமிப்பு மற்றும் முதலீடுகள் பற்றிப் பேசினாள்.


பார்கவி:
சரி! அதுக்கு இப்போ என்ன அக்கா?


தமிழினி:
எனக்கு கொஞ்சம் புரிஞ்சு கொள்ள முடியல பார்கவி. நீ கொஞ்சம் விளக்கமா சொல்றியாடி?


பார்கவி:
தமிழினி அக்கா, முதலீடும் சேமிப்பும் இரண்டுமே முக்கியம், ஆனா இரண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. முதலில் சேமிப்பு பற்றி பார்ப்போம்.


சேமிப்பு என்றால் என்ன?


தமிழினி:
ஆமா, சேமிப்புன்னா என்ன?


பார்கவி:
சேமிப்புன்னா, நீங்க சம்பாதிக்கிற பணத்தல இருந்து செலவுபண்ணாம உண்டியல்ல வச்சுக்குறது மாதிரி. இங்க உண்டியல்ங்கிறது பேங்க். உங்களுக்கு எதாவது அவசரத்துல காசு தேவைப்படுறப்ப இந்த சேமிப்பு பணம் உதவியா இருக்கும். இது குறுகிய கால தேவையை பூர்த்தி செய்யும் அக்கா. இது வீட்டுக்குள்ள வளர்க்கிற செடி மாதிரி.


முதலீடு என்றால் என்ன?


தமிழினி:
புரிஞ்சுது! அப்போ முதலீடுன்னா?


பார்கவி:
முதலீடுன்னா, நீங்க சம்பாதிச்ச காசை இரட்டிப்பா பெருக்குவது. இது வீட்டுக்கு வெளில வளர்க்கிற மரம் மாதிரி.


சேமிப்பு மற்றும் முதலீட்டின் முக்கியத்துவம்


தமிழினி:
முதலீட்ல ரிஸ்க் இருக்குனு சொன்னியே பார்கவி.


பார்கவி:
ஆமாம், அக்கா! முதலீட்ல ரிஸ்க் இருக்கும். இது நீங்க எந்த வகை முதலீட்ல பணத்தை முதலீடாகப் போடறீங்கனு மாறுபடும். நிலம் வாங்குவது, பங்குகள் வாங்குவது, மியூச்சுவல் ஃபண்ட், government bonds - இதெல்லாமே ரிஸ்க் ரொம்ப இருக்கும் அக்கா.


தமிழினி:
அப்போ, சேமிப்புன்னா வளர்ச்சி இருக்காது, ஆனால் உடனடி தேவையை பூர்த்தி செய்யும். முதலீட்டில் பிரமாண்ட வளர்ச்சி இருக்கும், அப்படிதானா?


பார்கவி:
ரொம்ப நல்லா புரிஞ்சுகிட்டிங்க! சேமிப்பு என்பது high liquidity, இது செடி மாதிரி. முதலீடு என்பது low liquidity, இது மரம் மாதிரி.


தமிழினி:
நான் நானும் பார்கவி பைனாஸ் வீடியோ பார்க்கிறேன்லா.. அக்கா, நான் ஒன்னு கேட்கலாமா?


பார்கவி:
கேளு, என்ன?


தமிழினி:
முட்டை போடும் மூனு உயிரினத்தின் பெயர் சொல்லுங்க?


பார்கவி:
கோழி, பல்லி, வாத்து!


தமிழினி:
அய்யோ, அது இல்லை! கணக்கு டீச்சர், இங்கிலீஷ் டீச்சர், கெமிஸ்டிரி டீச்சர்! என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!



பார்கவி:
அது சரி. முக்கியமான விஷயத்துக்கு வரேன். சேமிப்பு செடி மாதிரி, முதலீடு மரம் மாதிரி!



தமிழினி:
நன்றி, பார்கவி! இப்போ எனக்கு தெளிவாயிட்டுச்சு. முதலீடும் சேமிப்பும் எவ்வளவு முக்கியம்னு!


பார்கவி:
சரி, தமிழினி அக்கா! நீங்க புரிஞ்சதுக்கு ரொம்ப சந்தோஷம். இது போன்று finance-related video இந்த channelல் வரும். அதை தெரிஞ்சுக்க channel-யை subscribe செய்யவும்.


நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?





#சேமிப்புvsமுதலீடு #முதலீடுகள் #பங்குச்சந்தை #காசுசேமிப்பு #முதலீடுரிஸ்க்
#முதலீட்டின்முக்கியத்துவம் #ParkaviFinance

கருத்துரையிடுக

0 கருத்துகள்